அம்பாந்தோட்டையில் உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை கையாளும் மையத்தில் எதிர்பாராத குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் நடைபெறும் இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகளைத் திறந்து பரிசோதித்தபோது, நாளை நடைபெறவுள்ள பௌதிகவியல் முதலாம் பாகத்துக்குரிய 06 வினாத்தாள் பொதிகள் தவறுதலாக அதே பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பௌதிகவியல் வினாத்தாள் பொதிகள் திறக்கப்படவில்லை என்றும், அவற்றின் இரகசியத்தன்மைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
வினாத்தாள்கள் எவ்வாறு தவறான பெட்டியில் சேர்க்கப்பட்டன என்பது தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவத்துக்கான காரணம் மற்றும் பொறுப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.








