கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட காரைதீவு மத்திய ஆயுர்வேத மருந்தகத்தின் புதிய கட்டிடம் இன்று (13) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் டாக்டர் எம்.ஏ.எம். நபீல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டுக்காக கையளித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா விசேட அதிதியாகக் கலந்துகொண்டார்.

மேலும், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ. பர்ஹான் மற்றும் கிருஷ்ணபிள்ளை செல்வராணி, காரைதீவு மத்திய ஆயுர்வேத மருந்தகத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம். காலித் உள்ளிட்ட சுதேச மருத்துவத் திணைக்கள அதிகாரிகள், வைத்தியர்கள், ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் காரைதீவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆயுர்வேத மருத்துவ சேவைகளை மேலும் சிறந்த முறையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களின் பாரம்பரிய மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், நாட்டின் சுதேச மருத்துவத் துறையை மேலும் மேம்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இக்கட்டிட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

















