Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விடுதலைப் போராட்ட வரலாறு அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய புனித மரபு; சிறீதரன் எம்.பி

விடுதலைப் போராட்ட வரலாறு அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய புனித மரபு; சிறீதரன் எம்.பி

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

​”எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய புனிதமான மரபு. எமது வரலாற்று நாயகர்களின் தியாகத் தடங்களை இளைய தலைமுறையிடம் சேர்ப்பது எமது தார்மீகக் கடமையாகும்.” என மலரும் புதுயுகம் அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

​”கடந்த கால அரசுகளைக் காட்டிலும் தற்போதைய அரசு, தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்க மிக நுணுக்கமான அரசியல் காய்நகர்த்தல்களைச் செய்கின்றது. யுத்தம் மௌனிக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும், எமது பூர்வீகக் காணி அபகரிப்புகள் ஓயவில்லை.

இராணுவமயமாக்கல் ஊடாக எமது நிலங்கள் பறிக்கப்படுவதும், மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதும் இன்றும் தீர்க்கப்படாத வலிகளாகத் தொடர்கின்றன. இதற்குப் பின்னால் இருப்பது மிகத் தெளிவான சிங்கள மேலாதிக்க மனநிலை. தமிழர்களைத் தமக்குச் சமமான குடிமக்களாகக் கருதாது, இழிவான பார்வையுடன் அடக்கி ஒடுக்கும் போக்கையே அவர்கள் இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.

​இத்தனை ஒடுக்குமுறைகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில்தான், கடந்த 16 ஆண்டுகளில் நாம் அழிந்துபோன நிலையிலிருந்து மீண்டு, அறத்தின் வழியிலான அரசியலை முன்னெடுத்துள்ளோம். எமது கொள்கை மீதான நேர்மையும், மக்களுக்காகத் துணிந்து நிற்கும் குணமுமே இன்று இந்த மண்ணின் மக்களை எம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

எமது சமூக மேன்மைக்கான இந்த நகர்வுகளைத் தகர்ப்பதற்குப் புலனாய்வுத் துறையினரும், ஒட்டுக்குழுக்களும் எம்மோடு ஒட்டிக்கொண்டு கடும் பிரயத்தனம் செய்வார்கள். ஆனால், எத்தகைய சதித்திட்டங்கள் வந்தாலும் தியாக தீபம் திலீபனைப் போன்றும், தியாகத்தாய் அன்னை பூபதி போன்றும் நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும்.

​அன்னை பூபதி அம்மா அவர்கள் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தனது உயிரையே ஈகம் செய்து எமக்குக் கற்பித்த உறுதியான கொள்கைத் தெளிவுள்ள விடுதலைக்கான அறைகூவலை, அதே உறுதியுடனும் தேசப்பற்றுடனும் நாம் உலகிற்கு உரக்கச் சொல்வோம். எமது வீரஞ்செறிந்த போராட்ட வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லும் வரலாற்றுப் பணியை அன்னை பூபதியின் நினைவில் நின்று தொடர்வோம்” எனத் தெரிவித்தார்.

​கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர் சங்கத்தின் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் குணபாலசிங்கம் குணராஜ், மதகுருமார்கள், மலரும் புதுயுகம் அமையத்தின் உறுப்பினர்கள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு தொடரும்; ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உறுதி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு தொடரும்; ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உறுதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.