Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த புதிய நடவடிக்கை; பயங்கரவாத நிதி வழங்கலுக்கு எதிராகத் கடும் தடைகள்!

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த புதிய நடவடிக்கை; பயங்கரவாத நிதி வழங்கலுக்கு எதிராகத் கடும் தடைகள்!

5 months ago
in செய்திகள்

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதைத் தடுப்பதற்காக ‘இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகளை’ அமுல்படுத்துவது தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தடைகளின் கீழ், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அல்லது அதற்கு நிதி உதவி வழங்குவதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அல்லது அமைப்புகளின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் மற்றும் ஏனைய சொத்து விபரங்களை முழுமையாக முடக்குவதற்கு முடியும். அதன்படி, அந்தச் சொத்துக்களைப் பயன்படுத்துதல், மாற்றுதல் அல்லது விற்பனை செய்தல் என்பன சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்படுகின்றன.

இந்த நடைமுறையானது, 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஒழுங்குவிதியின் மூலம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1373 (2001) தீர்மானத்திற்கு இணங்க செயல்படுத்தப்படுகிறது.

இத்தடைகளை விதிக்கும் அதிகாரம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் உள்ள அதேவேளை, அதன் செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் “தகுதியுள்ள அதிகாரியாக” நியமிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை ஆரம்ப நிலையிலேயே தடுப்பதற்கும், நாட்டின் நிதி அமைப்பைப் பாதுகாப்பதற்கும், சர்வதேசக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்குவதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் தகுதியுள்ள அதிகாரியின் அலுவலகத்தினால் www.competentauthority.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நவீன சட்ட மற்றும் நிர்வாக நடைமுறையூடாக இலங்கையில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பு மேலும் பலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
Next Post
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவன்; 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி! சிறியதாயின் உருக்கமான கோரிக்கை!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவன்; 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி! சிறியதாயின் உருக்கமான கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு