Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தலதா மாளிகையை நோக்கிஎஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணம்

தலதா மாளிகையை நோக்கிஎஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணம்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணத்தின்” இரண்டாம் கட்டம் இன்று (23) ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம் மாத்தளை வரலாற்றுச் சிறப்புமிக்க அலுவிஹாரை விகாரையிலிருந்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வரை இந்த நடைப்பயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வியட்நாமின் பன்னகார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவினால் நேற்று (22) தம்புள்ளை புனித நகரிலிருந்து இந்த நடைப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜய ஸ்ரீ மகா போதியின் புனித போதி மரக்கன்றினை ஏந்திச் செல்லும் இந்த ஆன்மீக ஊர்வலம், பிரதான நகரங்களினூடாகப் பயணித்து ஒற்றுமை, கருணை மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கு முன்னர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணத்தின் தொடர்ச்சியாகவே இது இலங்கையில் முன்னெடுக்கப்படுகிறது.

அரச அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடைப்பயணம் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

இந்த நடைப்பயணத்தில் பிக்குகளுடன் இணைந்து “ஆலோகா” (Aloka) எனும் பெயருடைய நாய்யொன்றும் பயணிப்பது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நடைப்பயணத்தில் பங்கேற்கும் தேரர்கள் உள்ளிட்ட குழுவினரைத் தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பாதையோரங்களில் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், தேரர்களின் பயணத்தை இலகுவாக்கும் வகையில் வீதியெங்கும் வாழை இலைகளை விரித்து வைத்ததோடு வெயிலினால் சூடாகியிருந்த பாதையைக் குளிர்விப்பதற்காக மக்கள் வீதிகளில் குளிர்ந்த நீரைத் தெளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!

July 31, 2026
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்
செய்திகள்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

July 31, 2026
ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது

July 31, 2026
கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!
செய்திகள்

கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!

July 31, 2026
தெஹிவளை கொள்ளை வழக்கு; இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!
செய்திகள்

தெஹிவளை கொள்ளை வழக்கு; இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

July 31, 2026
Next Post
தமிழக சட்டமன்ற தேர்தல்; இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல்; இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு