Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
3 நாட்களுக்கு மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு!

3 நாட்களுக்கு மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு!

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கேகாலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணத்தை” முன்னிட்டு,

இன்று (24) முதல் 3 நாட்களுக்கு மதுபானசாலைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு இந்தத் தடை அமுலில் இருக்கும். கடுகண்ணாவ முதல் வரக்காப்பொல வரையான பிரதான வீதியை அண்டிய பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகள், மீன் விற்பனை நிலையங்கள் ஆகிய வர்த்தக நிலையங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான தம்மிக படபெந்தி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அமைதி நடைபயணம் மற்றும் ஆன்மீக யாத்திரை நடைபெறும் காலப்பகுதியில், கொழும்பு – கண்டி பிரதான வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் ஒலிப்பான்களை (Horns) பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் தம்மிக படபெந்தி விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஆன்மீக நிகழ்வின் போது ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் காவல்துறையினரின் முழுமையான ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. அமைதி நடைப்பயணம் எவ்வித இடையூறுமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“சாணக்கியனின் தொகுதிகளிலிருந்தே வடி சாராயம் உற்பத்தியாகிறது!”; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

“சாணக்கியனின் தொகுதிகளிலிருந்தே வடி சாராயம் உற்பத்தியாகிறது!”; அந்தனிசில் ராஜ்குமார்

November 2, 2026
இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!
செய்திகள்

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!

November 2, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!
செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!

November 2, 2026
மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
செய்திகள்

மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

November 2, 2026
நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம
செய்திகள்

நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம

November 2, 2026
‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

November 2, 2026
Next Post
சாகரிக்கா ரயில் தடம்புரண்டது; கரையோர ரயில் போக்குவரத்துப் பாதிப்பு!

சாகரிக்கா ரயில் தடம்புரண்டது; கரையோர ரயில் போக்குவரத்துப் பாதிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு