Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையான் சிறையிலிருந்த போது நடந்துள்ள இரகசிய சந்திப்புகள்; வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

பிள்ளையான் சிறையிலிருந்த போது நடந்துள்ள இரகசிய சந்திப்புகள்; வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவம் தொடர்பில் 2015 முதல் 2021 வரை பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நடந்த பல சந்திப்புகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பிள்ளையானுடன் சிறையில் இருந்த ஒருவரின் சாட்சியத்தின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத்துறையினர் சமர்ப்பித்துள்ள தகவல்களின் படி, பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 2015 முதல் 2021 வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, பேராசிரியர் ரொஹான் குணரத்ன அவரை 3 சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிள்ளையானுடன் சிறையில் இருந்த ஒருவரின் சாட்சியத்தின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சந்திப்புகளின் போது பேராசிரியர் குணரத்னவுடன் இரு பெண்கள் சென்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் பின்னர் நேரடியாக இலங்கை இராணுவத்தில் ‘மேஜர் தரத்துக்கு நியமிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் செய்னி மௌலவி மற்றும் மில்ஹான் ஆகியோரை பிள்ளையான் தான் இருந்த சிறை அறைக்கே அழைத்துச் சென்றதாக அந்தச் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்த போது எவராவது அருகில் சென்றால் பேச்சை மாற்றி விடுவார்கள் என்றும் சாட்சியாளரை கோடிட்டு, குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!
செய்திகள்

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!

November 2, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!
செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!

November 2, 2026
மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
செய்திகள்

மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

November 2, 2026
நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம
செய்திகள்

நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம

November 2, 2026
‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

November 2, 2026
இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!
செய்திகள்

இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!

November 2, 2026
Next Post
அலுவலக ரயில் சேவைகளை இரத்து செய்யாமல் முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் தீர்மானம்!

அலுவலக ரயில் சேவைகளை இரத்து செய்யாமல் முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு