Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின்னல் அச்சுறுத்தலால் தத்தளிக்கும் இரத்தினபுரி கிராமம்!

மின்னல் அச்சுறுத்தலால் தத்தளிக்கும் இரத்தினபுரி கிராமம்!

1 month ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமது சொந்த முயற்சியில் ஈட்டிய வருமானத்தைக் கொண்டு வாழ்ந்தாலும், ஒரு விசித்திரமான உயிராபத்துடனேயே வாழும் கிராம மக்கள் குறித்த தகவல் இரத்தினபுரி மாவட்டத்தின் பிட்டகந்த கிராமத்திலிருந்து பதிவாகியுள்ளது.

தமது கிராமம் அடிக்கடி மின்னல் தாக்கங்களுக்கு உள்ளாவதே இவர்களுக்குள்ள ஒரே பிரச்சினையாகும். இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்தக் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. தேயிலை, கறுவா மற்றும் கோப்பிப் பயிர்ச்செய்கையே இவர்களின் பிரதான வாழ்வாதாரமாகும். இதன் காரணமாக இப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியாக ஸ்திரமான நிலையில் உள்ளனர்.

எனினும், மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள பிடகந்த கிராம மக்கள் எதிர்கொள்ளும் பெரும் சவாலாகத் தொடர்ச்சியான மின்னல் தாக்கங்கள் அமைந்துள்ளன. இது தொடர்பாக கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்து, மின்னல் கடத்திகளை பொருத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இதுவரை அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

அங்குள்ள பாடசாலை, விகாரை மற்றும் வீடுகள் என அனைத்து இடங்களும் அடிக்கடி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகின்றன. கிராம மக்களின் கூற்றுப்படி, மின்னல் தாக்காத வீடுகளே அங்கு இல்லை எனும் நிலை காணப்படுகிறது. அத்துடன், மின்னல் தாக்கம் காரணமாக இதுவரை சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி இரவு, சித்திரை புத்தாண்டு பிறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், கடந்த 23 ஆம் திகதி கிராமத்து விகாரையின் மீது மின்னல் தாக்கியதில், அதன் விகாரதிபதி காயமடைந்து அயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமது உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் வகையில், விரைவில் மின்னல் கடத்திகளைப் பொருத்தித் தருமாறு இக்கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய டிஜிட்டல் மோசடி!

வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய டிஜிட்டல் மோசடி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு