Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
துப்பாக்கியை காட்டிய அர்ச்சுனா; கல்லால் எறிந்த பெண்ணுக்கு விளக்கமறியல்

துப்பாக்கியை காட்டிய அர்ச்சுனா; கல்லால் எறிந்த பெண்ணுக்கு விளக்கமறியல்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் கொலை மிரட்டலுக்குள்ளான குடும்பப் பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது அவரது ஒரு வயது குழந்தையும் அவருடனேயே இருக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றையதினம் பெரியளான் பகுதியில் உள்ள காணியை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுத்தம் செய்ய முற்பட்டார். இந்நிலையில் அந்த பகுதியில் தமது காணியும் இருப்பதாக தெரிவித்து சிலர் அவருடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

குறித்த காணி எல்லை பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண்ணின் உறவினரான இளைஞர் ஒருவரும் அந்த இடத்திற்கு சென்ற நிலையில் அர்ச்சுனா எம்.பி அந்த இளைஞனை காலால் எட்டி உதைத்ததாக அந்த இளைஞரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டி உன்னை கொலை செய்வேன் என அந்த பெண்ணுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதன்போது சட்டத்தரணி கௌசல்யாவும் அந்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை காணொளியும் பதிவு செய்துள்ளார்.

பின்னர் அர்ச்சுனா, இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் அவரை இன்றையதினம் முற்படுத்தினர்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இருப்பினும் பகிரங்க கொலை மிரட்டல் மற்றும் இளைஞரை தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
திருக்கோவிலில் பெண் பொலிஸ் அதிகாரி மீது கத்தியால் தாக்கிய மதுபோதை இளைஞன்

திருக்கோவிலில் பெண் பொலிஸ் அதிகாரி மீது கத்தியால் தாக்கிய மதுபோதை இளைஞன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு