Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருக்கோவிலில் பெண் பொலிஸ் அதிகாரி மீது கத்தியால் தாக்கிய மதுபோதை இளைஞன்

திருக்கோவிலில் பெண் பொலிஸ் அதிகாரி மீது கத்தியால் தாக்கிய மதுபோதை இளைஞன்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது சாணம் வீசி அவரை கத்தியால் வெட்டி தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கள்ளியந்தீவைச் சேர்ந்த மது போதைக்கு அடிமையாகிய 30 வயதுடைய இளைஞரை எதிர்வரும் 8ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை (25) உத்தரவிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பொலிஸ் நிலையத்தில் பெண்கள் பிரிவுக்கு பொறுப்பாக கடமையாற்றி வரும் திருக்கோவிலைச் சேர்ந்த பெண் பொலிஸ் அதிகாரி சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் 3.00 மணியளவில் மதிய உணவுக்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்று பொலிஸ் நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் சக்தி பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கத்தியுடன் நின்று கொண்டிருந்த அந்த குறித்த நபர் வீதியில் பிரயாணித்துக் கொண்டிருந்த பெண் பொலிஸ் அதிகாரி மீது மாட்டு சாணம் வீசி எறிந்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதை அவரது மேலதிகாரிக்கு அறிவித்துக் கொண்டார்.

அதன் பின்னர் குறித்த நபரை பெண் பொலிஸ் அதிகாரி பின் தொடர்ந்து கொண்டிருந்த போது குறித்த நபர் மாணிக்க பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வீதியில் கத்தியை சுழற்றி அவரை அச்சுறுத்திக் கொண்டிருந்துள்ளதையடுத்து அவரிடம் இருந்து கத்தியை பறிக்க முற்பட்டபோது பெண் பொலிஸ் அதிகாரி மீது கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்துள்ளதுடன் அவரின் பொலிஸ் யூனிபோமை கிழித்து கொண்டபோதும் ஒருவாறு அவனை மடக்கிடிபித்து கைது செய்து கொண்டதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்தவரை நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது நீதவான் அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபர் மது போதைக்கு அடிமையாகியுள்ள அவரை புனர்வாழ்வுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வந்துள்ளனர் இதன் காரணமாக குறித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது கோபம் கொண்ட அவர் அண்மையில் அவர் வீதியால் செல்லும் போது வைத்தியசாலைக்கு அருகாமையில் வைத்து அவர் மீது செருப்பை வீசி எறிந்ததுடன் அவர் வீதியால் பிரயாணிக்கும் போதும் அவரது வீட்டின் மீதும் தொடர்ந்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
களுவாஞ்சிக்குடியில் நகை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஆபரணங்களுடன் தலைமறைவு

களுவாஞ்சிக்குடியில் நகை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஆபரணங்களுடன் தலைமறைவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு