Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டு; விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம்

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டு; விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம்

4 months ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தேர்தல் பிரசாரத்தின்போது, அரசியல் இலாபத்துக்காக சிறுவர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி மாநில டிஜிபிக்கு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு சபை கடிதம் எழுதியுள்ளது.

சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜய் பேசும்போது, பெற்றோர்களை விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போட சிறுவர்கள் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தார். ஒரு சில முறை இவ்வாறு விஜய் பேசியிருந்தார்.

விஜயின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்தது. அரசியல் காரணங்களுக்காக சிறுவர்களை தூண்டிவிடுவது சட்டவிரோதமானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் வந்தன.

இந்நிலையில், தமிழக சிறுவர்கள் உரிமைகள் பாதுகாப்பு சபையின் சார்பில், பொலிஸ் டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில், தேர்தல் பிரசாரத்தின்போது ஓட்டு சேகரிப்பதற்காக சிறுவர்களை தூண்டிவிட்டு, பெற்றோரை தவெகவிற்கு ஓட்டுப்போடு வற்புறத்தவைத்த குற்றச்சாட்டு தொடர்பாக விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக சிறுவர்களை பயன்படுத்தியது குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை அகற்ற வேண்டும். விஜய் மற்றும் அவரது கட்சியின் பிரசார குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் சபைக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மது அருந்த பயன்படுத்தப்பட்ட அரச வாகனம்; மட்டக்களப்பில் கையும் மெய்யுமாக பிடிபட்ட காட்சி
செய்திகள்

மது அருந்த பயன்படுத்தப்பட்ட அரச வாகனம்; மட்டக்களப்பில் கையும் மெய்யுமாக பிடிபட்ட காட்சி

September 8, 2026
விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!
செய்திகள்

விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!

September 8, 2026
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!
செய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

September 8, 2026
பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!
செய்திகள்

பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!

September 8, 2026
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

September 8, 2026
Next Post
எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஓர் ஆயுதம்; அமெரிக்காவை எச்சரிக்கிறது ஈரான்

எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஓர் ஆயுதம்; அமெரிக்காவை எச்சரிக்கிறது ஈரான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு