மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், அரச வங்கி ஒன்றில் வைப்பிலிட்டிருந்த தனது பணம் மோசடியாகத் திருடப்பட்டமை குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசுக்குச் சொந்தமான ஒரு வங்கியில் நான் சேமித்து வைத்திருந்த பணம் ஹேக் செய்யப்பட்டு (Hack) திருடப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து வங்கிகளில் சேர்க்கும் பணம் இவ்வாறு மாயமாகும்போது அவர்களுக்கு ஏற்படும் வலி எவ்வளவு என்பது எனக்குத் தெரியும். இப்போது அந்த வேதனையை அரசாங்கமும் உணர்ந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.”
தற்போது நாட்டில் அதிகரித்துள்ள நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து சுட்டிக்காட்டிய தேரர், மக்களின் பணத்திற்கு வங்கிகளில் பாதுகாப்பு இல்லையென்றால், பொதுமக்கள் யாரிடம் செல்வார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.








