Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
700 இளம் பெண்களின் தொலைபேசி இலக்கங்கள்; மோசடி மற்றும் மிரட்டல்கள் செய்யும் 24 வயது இளைஞன் கைது

700 இளம் பெண்களின் தொலைபேசி இலக்கங்கள்; மோசடி மற்றும் மிரட்டல்கள் செய்யும் 24 வயது இளைஞன் கைது

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

டெலிகிராம் குழுவைப் பயன்படுத்தி, கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு மோசடி மற்றும் மிரட்டல் செயல்களில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

அம்பாறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இந்தச் சந்தேகநபர், பிபில பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில் பெண்களுடன் நட்பாகப் பழகி, பின்னர் அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து (Edit) , அவற்றைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.

எவ்வாறு மிரட்டி, அந்தப் பெண்களிடமிருந்து மேலும் பல தனிப்பட்ட புகைப்படங்களைப் பெற்றுக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, சுமார் 700 இளம் பெண்களின் தொலைபேசி எண்கள் மற்றும் சிலரின் தனிப்பட்ட (ஆபாசமான) புகைப்படங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தனது அடையாளத்தை மறைக்க, டெலிகிராம் கணக்குகளில் போலிப் பெயர்களைப் பயன்படுத்தியதுடன், அழைப்புகள் வராதவாறு அமைப்புகளையும் (Settings) அவர் மாற்றியமைத்திருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிபில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பயம் மற்றும் அவமானம் காரணமாகப் பல மாணவிகள் புகார் அளிக்க முன்வராத நிலையில், இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை CIDயின் கணினி குற்றப்பிரிவு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போது பெண்கள் மற்றும் மாணவிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாப்புத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு

July 25, 2026
யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு
செய்திகள்

யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு

July 25, 2026
நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது

July 25, 2026
Next Post
செம்மணியில் இன்று குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணியில் இன்று குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு