Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நோர்வூட்டில் கருப்புக் கொடிப் போராட்டம்; புதிய மதுபானசாலைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினர்

நோர்வூட்டில் கருப்புக் கொடிப் போராட்டம்; புதிய மதுபானசாலைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினர்

3 months ago
in செய்திகள்

நோர்வூட் பகுதியில் பொகவந்தலாவ சாலையில் புதிய மதுபானசாலை ஒன்றைத் தொடங்கும் முயற்சிக்கு எதிராக இன்று (06) உள்ளூர் மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். கருப்புக் கொடிகளை ஏந்திய அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக, நோர்வூட் நகரின் முக்கிய வர்த்தக நிலையங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், பல கடைகளில் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.

இப்பகுதியில் ஏற்கனவே மூன்று மதுபானசாலைகள் இயங்கிவருகின்றன என்பதையும், மேலும் ஒரு மதுபானசாலை தொடங்கப்படுவது சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் மக்கள் சுட்டிக்காட்டினர். அதனால், புதிய மதுக்கடையைத் திறக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், அந்த மதுபானசாலை அமைக்கப்படவுள்ள கட்டிடத்தின் மேல்தளத்தில் தனியார் கல்வி வகுப்புகள் நடைபெற்று வருவதால், மாணவர்களின் கல்வி சூழலுக்கும் இது பாதிப்பு ஏற்படுத்தும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

புதிய மதுபான அனுமதிகள் வழங்கப்படமாட்டாது என அரசு முன்பு தெரிவித்திருந்த நிலையிலும், புதிய உரிமம் வழங்கப்படுவது இளைஞர்களை மதுவழக்கத்திற்கு இட்டுச் செல்லும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டனர்.

போராட்டத்தின் போது பதாகைகள் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் மக்கள் தங்கள் எதிர்ப்பை வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி விளக்கமளித்தபோது, நோர்டன் பிரிட்ஜ் பகுதியில் உள்ள ஒரு மதுபானசாலையை தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் நோர்வூட்டிற்கு மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும், பொதுமக்களின் எதிர்ப்பு தொடருமானால், அவர்களுடன் ஆலோசித்து தேவையான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்
செய்திகள்

இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்

July 29, 2026
கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!
செய்திகள்

கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!
செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!

July 29, 2026
Next Post
ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு