பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கொடுப்பனவுப் பிரிவில் பணத்திற்குப் பொறுப்பாக பணியாற்றியிருந்த கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து ரூ. 3,540,415 தொகையை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சந்தேக நபருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு தலைமையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவக்கு அவர்களின் ஆலோசனையுடன், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் ஆரியவன்ச இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்.








