முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் நாடாளுமன்றஉறுப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (18.09.2023) காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் தேவிபுரம், வள்ளிபுனம் கிராம மக்கள் முதன்மை வீதியில் ஒன்று கூடி கையில் பதாதைகளை தாங்கியவாறு, மக்கள் எதிர்ப்பு கோஷங்களை வெளிப்படுத்தி வள்ளிபுனம் சந்தி வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.