மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஏறாவூர்பற்று -2 கல்வி கோட்டத்தின் அகில இலங்கை தமிழ் தினபோட்டி இன்றைய தினம் (07) வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.
கோட்டக்கல்வி பிரதி கல்வி பணிப்பாளர் சீவரெத்தினம் தயாளசீலன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் கல்குடா கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களுக்காளை வரவேற்கும் நிகழ்வு கலாசார முறையில் நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து மங்கள விளக்கு ஏற்றப்பட்டு, இறைவணக்கத்தை தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்து பாடப்பட்டு வரவேற்று நடனம் இடம்பெற்றது.







இதன் பின்னர் நிகழ்வுக்கு வருகைதந்த கல்குடா கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர்கள் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
நிகழ்வுக்கு கல்குடா கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் நிருவாகம் கந்தசாமி ஹரிஹரராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
தமிழ் தினபோட்டி ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து போட்டி நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.








