Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
180 அலகுகளுக்கு மேல் மின்சார பயன்பாட்டுக்கு 18% கட்டண உயர்வு!

180 அலகுகளுக்கு மேல் மின்சார பயன்பாட்டுக்கு 18% கட்டண உயர்வு!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளை முன்னிட்டு, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கான மின்கட்டணத்தை 18 சதவீதத்தால் உயர்த்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இருப்பினும், 180 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின் உற்பத்திச் செலவு அதிகரித்தமை காரணமாக, இந்த மற்றும் அடுத்த காலாண்டுகளில் சுமார் 38 பில்லியன் ரூபாய் வரையிலான பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை உட்பட மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மின்கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எனினும், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் நிவாரணத்தை வழங்க எழுத்து மூலம் இணக்கம் தெரிவித்துள்ளதால், இந்த கட்டண உயர்வு நாட்டின் 5 சதவீத மின் நுகர்வோரை மட்டுமே பாதிக்கும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் 95 சதவீத மின் நுகர்வோருக்கு இந்த மின்கட்டண உயர்வு பொருந்தாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் விதம்

வீட்டு மின் பாவனை
180 அலகுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை.
180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 18 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.

பொதுப் பயன்பாட்டு பிரிவு
180 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் பிரிவுகளுக்கு கட்டண உயர்வு இல்லை.
மற்ற பொதுப் பயன்பாட்டு பிரிவுகளுக்கு 18 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.

அரச நிறுவனங்கள்
அனைத்து அரச நிறுவனங்களுக்கும் 18 சதவீத மின்கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும்.

சுற்றுலா ஹோட்டல்கள்
குறைந்த மின் நுகர்வு கொண்ட ஹோட்டல்களுக்கு கட்டண உயர்வு இல்லை.
அதிக மின் நுகர்வு காணப்படும் ஹோட்டல்களுக்கு 18 சதவீத கட்டண உயர்வு அமலாகும்.

கைத்தொழில் துறை
சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்கு கட்டண உயர்வு இல்லை.
பெரிய அளவிலான கைத்தொழில்களுக்கு 18 சதவீத கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும்.

வழிபாட்டுத் தலங்கள்
180 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வழிபாட்டுத் தலங்களுக்கு கட்டண உயர்வு இல்லை.
180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் பட்சத்தில் 18 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
Next Post
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்தைக் கடந்தது

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்தைக் கடந்தது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.