Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருள் மற்றும் தங்கப் பயன்பாட்டில் கட்டுப்பாடு அவசியம்; இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

எரிபொருள் மற்றும் தங்கப் பயன்பாட்டில் கட்டுப்பாடு அவசியம்; இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

4 months ago
in செய்திகள்

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் பொருளாதார நலனை பாதுகாக்க பெற்றோல், டீசல் மற்றும் தங்கப் பயன்பாட்டில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலுங்கானாவில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

சர்வதேச அளவில் உருவாகியுள்ள எரிசக்தி நெருக்கடியை சுட்டிக்காட்டிய பிரதமர், இறக்குமதி செய்யப்படும் பெற்றோலியப் பொருட்களை அவசியத் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இவ்வாறு கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும் என்றும், போரால் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகளை குறைக்கவும் இது உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மெட்ரோ ரயில் சேவை உள்ள நகரங்களில் மக்கள் அதிகளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலும் எரிபொருள் பயன்பாடும் குறைய தனியார் நிறுவனங்கள் மீண்டும் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர், தங்கம் வாங்குவதை ஒரு வருடத்திற்கு தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

“போர் காலங்களில் மக்கள் தங்கத்தை நாட்டிற்காக தானமாக வழங்கியுள்ளனர். இன்று தானம் தேவையில்லை. ஆனால் அடுத்த ஒரு ஆண்டுக்கு அவசியமின்றி தங்கம் வாங்கமாட்டோம் என்ற உறுதியை ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

சூரிய சக்தி உற்பத்தியில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளதாகவும், பெற்றோலில் எத்தனால் கலக்கும் திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வீடுகளுக்கு குறைந்த விலையில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டங்களும், சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு பயன்பாட்டும் ஊக்குவிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்து வரும் இந்த நேரத்தில், வளங்களை சிக்கனமாக பயன்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும் கடமையும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
மட்டக்களப்பு மண்முனை பகுதியில் தீப்பற்றி எரிந்த வேன்

மட்டக்களப்பு மண்முனை பகுதியில் தீப்பற்றி எரிந்த வேன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.