உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த யோசனைக்கு ஈரான் வழங்கிய பதிலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்க மறுத்துள்ளமை, இந்த விலை உயர்விற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக உலக எண்ணெய் சந்தையில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 104.1 டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, டபிள்யூ.டி.ஐ வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.51 டொலராக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அரசியல் பதற்றங்களின் தாக்கம் உலக பொருளாதாரத்திலும் எரிபொருள் சந்தையிலும் தொடர்ந்தும் பிரதிபலித்து வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.








