வாகரை பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (11) நடைபெற்றது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான இஸ்மாயில் ஹாஜியாரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தலைமை தாங்கினார்.
இதில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு, வாகரை மக்களை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அத்துடன், குடிநீர், வீதி, கல்வி, வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் சிக்கல்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ். எம். தாஹிர், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் அனஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.








