மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (14) மாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடனான வானிலை ஓரளவு குறைந்திருந்த போதிலும், இன்று மாலை மீண்டும் கனமழை ஆரம்பமானது. ஏற்கனவே கடந்த நாட்களில் பெய்த மழையால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியிருந்த நிலையில், தற்போதைய மழை காரணமாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை தொடரும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.








