Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமைதிப் போராட்டத்திற்கு இடையூறு; மன்னிப்புக் கோரிய பொலிஸார்

அமைதிப் போராட்டத்திற்கு இடையூறு; மன்னிப்புக் கோரிய பொலிஸார்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி நிலவிய காலகட்டத்தில், காலி கோட்டைக்கு அருகில் சட்டத்தரணிகள் குழுவினர் நடத்திய அமைதியான போராட்டத்திற்குள் பொலிஸார் புகுந்து இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக, அன்றைய காலகட்டத்தில் காலி பிராந்தியத்திற்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட மூவர், சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகளிடம் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளனர்.

பொலிஸாரின் இந்தச் செயல் மூலம் தங்களது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி, காலி பிராந்தியத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளான அஜித் குமார மற்றும் அமரதிவாகர லியனகே ஆகிய இருவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீதி பத்மன் சூரசேன, அசல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த அன்றைய காலி பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.என்.ஜே. வேதசிங்க, அன்றைய காலி பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் காலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

அங்கு பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான அரசாங்க சட்டத்தரணி, இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதிவாதிகள் மனுதாரர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருவதாகத் தெரிவித்தார்.

அத்துடன், மனுதாரர்களிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோரும் ஆவணமொன்றை பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என்றும் அரசாங்க சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இந்த மன்னிப்பை மனுதாரர்கள் ஏற்றுக்கொள்வதாக அவர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இந்த இணக்கப்பாட்டைப் பதிவு செய்துகொண்ட பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த பிரதிவாதிகளான பொலிஸ் அதிகாரிகளை நோக்கி நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன கருத்துத் தெரிவிக்கையில்,

“அன்று நடந்த சட்டவிரோதச் செயல் குறித்தே இந்த மனுதாரர்களான சட்டத்தரணிகள் முறைப்பாடு செய்திருந்தனர். அவர்கள் காலியிலிருந்து இந்த வழக்கிற்காக இங்கு வந்துள்ளனர். இந்த வழக்கைத் தீர்த்துக்கொள்வதற்கு அவர்கள் முன்வந்திருப்பதை பாராட்ட வேண்டும். இது போன்றதொரு நிவாரணம் இவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை” என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மனு மீதான விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றம் தீர்மானித்தது.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனுவில், பொருளாதார நெருக்கடி நிலவிய 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06ஆம் திகதி, சட்டத்தரணிகள் குழுவொன்று காலி கோட்டைக்கு அருகில் பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

அச்சமயம், அந்த இடத்திற்குள் புகுந்த பொலிஸ் அதிகாரிகள், போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததுடன், போராட்டப் பதாகைகளைக் கிழித்தெறிய நடவடிக்கை எடுத்ததாகவும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தச் செயலின் மூலம் பிரதிவாதிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளனர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரியே குறித்த சட்டத்தரணிகளால் உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் எடுக்கவுள்ள நடவடிக்கை
செய்திகள்

யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் எடுக்கவுள்ள நடவடிக்கை

August 12, 2026
ஜனாதிபதி நிதிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததால் 25,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் தாமதம்
செய்திகள்

ஜனாதிபதி நிதிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததால் 25,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் தாமதம்

August 12, 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு முப்பீட மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு முப்பீட மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

August 12, 2026
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு; ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்!
செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு; ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்!

August 12, 2026
செம்மணி நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கு வீதி நாடகங்கள் மூலம் அழைப்பு
செய்திகள்

செம்மணி நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கு வீதி நாடகங்கள் மூலம் அழைப்பு

August 12, 2026
மட்டக்களப்பில் 14 வயது சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை
செய்திகள்

மட்டக்களப்பில் 14 வயது சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

August 12, 2026
Next Post
ஹிருணிகா பிரேமசந்திராவை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு!

ஹிருணிகா பிரேமசந்திராவை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.