முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காலை 10.10 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதுடன், உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்திக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கஞ்சி பரிமாறப்பட்டதுடன், இனப்படுகொலை காலத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டு உயிர் தப்பியவர்கள் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களையும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களையும் நினைவுகூர்ந்து, தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.








