எஹலியகொட, வலவிட்டவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் இக் கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கெட்டஹெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








