Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு; விவசாய அமைச்சு!

மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு; விவசாய அமைச்சு!

4 months ago
in செய்திகள்

கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பயிர்ச்சேதங்கள் மதிப்பிடப்பட்ட பின்னர், சேத விபரங்களுக்கு அமைய ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகிய பயிர்களுக்காக இந்த இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சேதமடைந்த பயிர்கள் தொடர்பான விபரங்களை அடுத்த 14 நாட்களுக்குள், அந்தந்த விவசாய சேவை நிலையங்களில் பராமரிக்கப்படும் ‘சேத விபரங்களை அறிவிக்கும் பதிவேட்டில்’ விவசாயிகள் பதிவு செய்தல் வேண்டும். இந்த இழப்பீட்டுத் திட்டத்திற்காக விவசாயிகளிடம் இருந்து எந்தவொரு காப்புறுதித் தவணைக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாகப் பல மாவட்டங்களில் பயிர்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தேங்கியுள்ள நீர் வற்றிய பின்னரே சேதமடைந்த பயிர்நிலங்களின் உண்மையான பரப்பளவைக் துல்லியமாகக் கண்டறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2026ஆம் ஆண்டுக்கான யல பருவப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட உடனே இந்த அதிக மழை பெய்துள்ளதால், சேதமடைந்த பயிர்கள் அனைத்தும் அவற்றின் ஆரம்பக் கட்ட வளர்ச்சியிலேயே காணப்படுகின்றன.

நாட்டின் விவசாயப் பெருமக்களின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். எனவே, இது தொடர்பான தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, விவசாய மக்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குமாறு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபைக்கு அவசர அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
அஸ்வெசும திட்டங்கள் மூலம் மக்களுக்கு கஷ்டம்; வீதிக்கிறங்கி இந்த அரசுக்கு முடிவு கட்டுவோம் என சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரிக்கை

அஸ்வெசும திட்டங்கள் மூலம் மக்களுக்கு கஷ்டம்; வீதிக்கிறங்கி இந்த அரசுக்கு முடிவு கட்டுவோம் என சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு