Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசின் வரி அமைப்பை விரிவுபடுத்தும் புதிய நடவடிக்கை; 28 துறைகளுக்கு 5% புதிய வரி

அரசின் வரி அமைப்பை விரிவுபடுத்தும் புதிய நடவடிக்கை; 28 துறைகளுக்கு 5% புதிய வரி

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசின் வரி வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் 28 தொழில்துறைகளை உள்ளடக்கிய வகையில் 5% முன்கூட்டிய வரி (Withholding Tax) அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு தொழில்முறை நிபுணர் அல்லது சேவை வழங்குபவர் ஒரு நிறுவனத்திடமிருந்து ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான கொடுப்பனவைப் பெறும் நிலையில், அந்த தொகையிலிருந்து 5% வரி முன்கூட்டியே கழிக்கப்படும் என அவர் கூறினார். இது புதிய வரி அல்ல என்றும், ஏற்கனவே உள்ள வரியை வசூலிக்கும் முறையை மேம்படுத்தும் நடவடிக்கை மட்டுமே என்றும் அவர் விளக்கினார்.

நாட்டில் வரி கோப்புகளின் எண்ணிக்கை முன்னர் சுமார் 8 இலட்சமாக இருந்த நிலையில் தற்போது அது 13 இலட்சமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் 23 இலட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும், அவர்கள் அனைவரையும் வரி அமைப்புக்குள் கொண்டு வருவது அரசின் இலக்காக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 13 இலட்சம் பேருக்கு வரி அடையாள எண் (TIN) வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளிலும் TIN கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி பிடித்தம் செய்யத் தவறும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசின் முக்கிய நோக்கம் தற்போதுள்ள 80% மறைமுக வரி மற்றும் 20% நேரடி வரி என்ற அமைப்பை மாற்றி நேரடி வரி வருவாயை அதிகரிப்பதாகும் என்றும் இதன் மூலம் பொதுமக்கள் மீது உள்ள மறைமுக வரிச் சுமையை குறைக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகர்களையும் படிப்படியாக வரி அமைப்புக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்
செய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்

September 10, 2026
யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்
செய்திகள்

யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்

September 10, 2026
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பேருந்து விபத்து
செய்திகள்

பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பேருந்து விபத்து

September 10, 2026
மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
Next Post
சட்டவிரோத கால்நடை கடத்தல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; நால்வர் கைது

சட்டவிரோத கால்நடை கடத்தல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; நால்வர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு