Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கில் 5ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்; மே 25 முதல் கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கு அவசர அழைப்பு!

வடக்கில் 5ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்; மே 25 முதல் கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கு அவசர அழைப்பு!

4 months ago
in செய்திகள்

வலிகாமம் வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக இன்றைய தினம் ஐந்தாவது வெள்ளிக்கிழமைத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கின் 248, 249, 251, 255 மற்றும் 256 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் அவர்களின் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அன்றிலிருந்து இன்றுவரை அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகவே பேணப்பட்டு வருகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், பாதுகாப்புத் தரப்பினர் இப்பகுதிகளிலிருந்து வெளியேறாததால் மக்கள் தொடர்ந்து தங்குமிடங்களிலேயே வாழும் அவலம் நீடிக்கிறது. தமது பூர்வீகக் காணியான சுமார் 651 ஏக்கர் நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை நடத்த மக்கள் தீர்மானித்திருந்தனர். அதற்கமைய, இன்றைய தினமும் மயிலிட்டி பகுதியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், “எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் வெசாக் தினம் வரை அப்பகுதி முழுவதும் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டுப் பாரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கு அனைத்து அரசியல்வாதிகளும், அரச நிர்வாக உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.

இன்றைய போராட்டத்தில் வலி. கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தி. நிரோஷ் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இதேவேளை, இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமகன் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “மக்களின் காணிகள் மக்களுக்கே எனக் கூறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஏன் எமது காணிகளை இன்னும் விடுவிக்கவில்லை? மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் செய்த கர்மவினைதான் அவர்களின் ஆட்சியை இல்லாமல் செய்தது. அதேபோல், அநுர அரசாங்கமும் மக்களைத் துன்புறுத்தும் வகையில் செயற்பட்டால், அந்த வினையே அரசாங்கத்தை நிலைகுலைய வைக்கும்.

நாங்கள் அரசாங்கத்திடம் வாழ்வதற்குப் பணம் கேட்கவில்லை; எமது சொந்தப் பணத்தில் வாங்கிய காணியை இராணுவப் பிடியிலிருந்து மீட்டுத் தருமாறே கோருகிறோம். ஆகவே, கடந்த கால ஆட்சிகளுக்கு நடந்த கர்மவினையை நினைவில் கொண்டு, வழங்கிய வாக்குறுதியின்படி எமது காணிகளை விரைவாக விடுவித்துத் தர வேண்டும்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!

September 10, 2026
மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதிகள்; வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதிகள்; வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

September 10, 2026
தங்கம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்; முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு பிணை!
செய்திகள்

தங்கம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்; முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு பிணை!

September 10, 2026
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லாது; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லாது; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 10, 2026
ஈரான்–அமெரிக்க பதற்றம் தீவிரம்; ஹார்முஸ் நீரிணை அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல்
உலக செய்திகள்

ஈரான்–அமெரிக்க பதற்றம் தீவிரம்; ஹார்முஸ் நீரிணை அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல்

September 10, 2026
பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ – 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம்
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ – 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம்

September 10, 2026
Next Post
உலகளவில் 1.2 பில்லியன் மக்கள் மனநலக் குறைபாடுகளால் பாதிப்பு; பெண்களும் இளைஞர்களுமே இலக்கு என ஆய்வு!

உலகளவில் 1.2 பில்லியன் மக்கள் மனநலக் குறைபாடுகளால் பாதிப்பு; பெண்களும் இளைஞர்களுமே இலக்கு என ஆய்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு