Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொரளை இரட்டைக் கொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் கட்டுநாயக்கவில் கைது!

பொரளை இரட்டைக் கொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் கட்டுநாயக்கவில் கைது!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு – பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘சிறிசர உயன’ அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) தொடர்ச்சியாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இக்கொலைச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு எதிராகச் சர்வதேசப் பொலிஸாரினால் (Interpol) ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் நேற்று (22) மீண்டும் நாட்டிற்குத் திரும்பிய போது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான்–அமெரிக்க பதற்றம் தீவிரம்; ஹார்முஸ் நீரிணை அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல்
உலக செய்திகள்

ஈரான்–அமெரிக்க பதற்றம் தீவிரம்; ஹார்முஸ் நீரிணை அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல்

September 10, 2026
பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ – 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம்
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ – 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம்

September 10, 2026
80 மில்லியன் டொலர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; மருதானையில் ஒருவர் கைது!
செய்திகள்

80 மில்லியன் டொலர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; மருதானையில் ஒருவர் கைது!

September 10, 2026
இலங்கைக்கு IMF தூதுக்குழு வருகை; 7வது மதிப்பாய்வு பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்
செய்திகள்

இலங்கைக்கு IMF தூதுக்குழு வருகை; 7வது மதிப்பாய்வு பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்

September 10, 2026
வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்
செய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்

September 10, 2026
யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்
செய்திகள்

யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்

September 10, 2026
Next Post
“இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை; ஊழல்வாதிகள் நீதிமன்றில் நிறுத்தப்படுவர்” – நிந்தவூரில் ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

"இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை; ஊழல்வாதிகள் நீதிமன்றில் நிறுத்தப்படுவர்" – நிந்தவூரில் ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு