வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் இதுவரை 2,388 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மே 29ஆம் திகதி வரை தானசாலைகள் பதிவு பணிகள் நடைபெறும் நிலையில், ஏற்பாட்டாளர்கள் விரைவாக பதிவு செய்யுமாறு அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த செயலாளர் சாமில் முத்துக்குட, MOH அலுவலகங்கள் மூலம் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சுகாதாரமான முறையில் தானசாலைகள் வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.








