Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான பிக்குவுக்கு பொலிசார் வழங்கியுள்ள விசேட கவனிப்பு; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான பிக்குவுக்கு பொலிசார் வழங்கியுள்ள விசேட கவனிப்பு; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவான  அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வன்புணர்வு மற்றும் சிறுமி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில், இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் அரசாங்கம் பாரபட்சமான முறையில் செயல்பட்டதாக தினன தகுண கூட்டிணைவு குற்றஞ்சாட்டியுள்ளது.

அந்த அமைப்பின் நிறைவேற்று சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மே 22ஆம் திகதி அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்கள், நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாரதூரமான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சந்தேகநபருக்கு பொலிஸார் வழங்கியதாகக் கூறப்படும் விசேட பாதுகாப்பு மற்றும் சலுகைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. சாதாரண சந்தேகநபர்களுக்கு வழங்கப்படாத வசதிகள் இவ்வழக்கில் வழங்கப்பட்டதாகவும், இது சட்டத்தின் முன் சமத்துவக் கொள்கைக்கு முரணானதாகவும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய வாக்குமூலம் தொடர்பான தகவல்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு உடனடியாக அறிவிக்கப்படவில்லை எனவும், இதனால் விசாரணையின் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கும் உயர்மட்ட அரச அதிகாரிகளுக்கும் இடையிலான உறவுகள் விசாரணையில் தாக்கம் செலுத்தியிருக்கலாம் என்ற அச்சமும் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை, வழக்கு விசாரணை நடைபெறும் காலத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணையில் தலையீடு செய்ததாகக் கூறப்படும் அதிகாரிகள் தொடர்பில் சுயாதீன மற்றும் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என தினன தகுண கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், மதம், அரசியல் அதிகாரம் அல்லது சமூக செல்வாக்கு ஆகியவை எதுவாக இருந்தாலும், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பாகும் என்றும் அந்த அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்
காணொளிகள்

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

July 27, 2026
கொத்தொட்டுவை அருகே பேருந்து – முச்சக்கரவண்டி மோதல்; சாரதி உயிரிழப்பு, இருவர் காயம்
செய்திகள்

கொத்தொட்டுவை அருகே பேருந்து – முச்சக்கரவண்டி மோதல்; சாரதி உயிரிழப்பு, இருவர் காயம்

July 27, 2026
பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டும் மேக்ரான்
செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டும் மேக்ரான்

July 27, 2026
கறுப்பு ஜூலை நினைவேந்தல்; லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகரகம் முன்பு கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கறுப்பு ஜூலை நினைவேந்தல்; லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகரகம் முன்பு கவனயீர்ப்பு போராட்டம்!

July 27, 2026
கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் ஹெரோயினுடன் பிக்கு கைது!
செய்திகள்

கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் ஹெரோயினுடன் பிக்கு கைது!

July 27, 2026
ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

July 27, 2026
Next Post
களுவாஞ்சிகுடி கடலில் மீன்பிடிக்க படகில் சென்ற 19 வயது இளைஞன் மாயம்

களுவாஞ்சிகுடி கடலில் மீன்பிடிக்க படகில் சென்ற 19 வயது இளைஞன் மாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு