கொழும்பு – ஐ.டி.எச். – கொலன்னாவை பிரதான வீதியில் கொத்தொட்டுவை நகருக்கு அருகே இன்று (27) காலை இடம்பெற்ற சாலை விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை சுமார் 9.10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, கவனக்குறைவாகச் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி ஒன்று எதிரே பயணித்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேவேளை, முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








