Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது; சரத் வீரசேகர கூறுகிறார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது; சரத் வீரசேகர கூறுகிறார்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சலே மீது முன்வைக்கப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த குற்றச்சாட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கடுமையாக விமர்சித்தார்.

அதேவேளை, நீதிமன்றத்தில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், சுரேஷ் சலேவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக குறிப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்படுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் என்பதும், அது ஏற்கனவே பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணைகள், ஆணைக்குழு அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், புதிய கோணத்தில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் கருத்துகள் மக்கள் மனதை குழப்பும் முயற்சி எனவும், இது அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

தேர்தல் காலத்தில் கத்தோலிக்க சமூகத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், அரசாங்கம் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், 2019 தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்புத் துறையின் முக்கிய பதவிகளில் இருந்த சிலர், புலனாய்வு தகவல்கள் இருந்தும் தாக்குதலைத் தடுக்கத் தவறிய நிலையில், இன்று அவர்கள் மீண்டும் விசாரணைகளை முன்னெடுப்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அன்றைய பொறுப்பின்மையை மறைத்து, தற்போது பிற அதிகாரிகளை குறிவைப்பது அரசியல் பழிவாங்கல் எனவும் அவர் விமர்சித்தார்.

இறுதியாக, புலனாய்வு அதிகாரிகளை அரசியல் காரணங்களுக்காக பலிகடாவாக்குவதை நிறுத்தி, சட்டம் நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சரத் வீரசேகர வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
Next Post
பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு!

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு