Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடலுக்குச் சென்ற 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு; சோகத்தில் களுதாவளை

கடலுக்குச் சென்ற 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு; சோகத்தில் களுதாவளை

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த விஜயகுமார் விஜயகாந்த் (19) என்பவர் கடந்த சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் சிறிய படகில் தனியாக கடலுக்குச் சென்றிருந்தார். எனினும், மறுநாள் காலை வரை அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் கவலையடைந்து களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து, கடற்படையினரும் உள்ளூர் மீனவர்களும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தேடுதலின் போது, இளைஞன் பயன்படுத்திய படகு கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அவர் அதில் இல்லாததால் தேடுதல் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை கல்முனைக்குடி மற்றும் கல்முனை கடற்பகுதிகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் சடலம் மிதந்துகொண்டிருப்பதை மீனவர்கள் அவதானித்து மீட்டுள்ளனர். பின்னர் சடலம் களுதாவளைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளை தொடர்ந்து, சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை குடும்பத்தினர் முன்வைத்துள்ள நிலையில், சம்பவத்தின் உண்மை காரணத்தை கண்டறியும் நோக்கில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
Next Post
மட்டு பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மட்டு பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு