Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்; பொலிஸ் மா அதிபர் அவசர உத்தரவு!

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்; பொலிஸ் மா அதிபர் அவசர உத்தரவு!

2 months ago
in செய்திகள்

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியப் மெக்களால் கொண்டாடப்படும் மத விழாக்களில் ஒன்றான, “தியாகத் திருநாள்” என அழைக்கப்படும் ஹஜ் பெருநாள் இம்முறை எதிர்வரும் 28ஆம் திகதி உதயமாகவுள்ளது.

இவ் வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன,

அதன்படி, விசேட தொழுகைகள் நடைபெறும் அனைத்து பிரதான பள்ளிவாசல்களையும் அதனை சூழவுள்ள பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில், சூழ்நிலைக்கு ஏற்ப பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தல்.

பள்ளிவாசல்களைச் சூழவுள்ள பகுதிகளில் அதிக வாகன நெரிசல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், முகாமைத்துவத்தை இலகுபடுத்துவதற்கும் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்.

இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் நகரப் பகுதிகளில் நடமாடும் பாதுகாப்பு சேவைகள், கால்நடை மற்றும் சைக்கிள் குறித்து பாதுகாப்பு சேவைகள், மோட்டார் சைக்கிள் பாதுகாப்புச் சேவைகளை முன்னெடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.

புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை ஈடுபடுத்தி, அவ்வப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப தகவல்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

பொலிஸாரினால் நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்புத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, பொலிஸாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர் அல்லது நடமாட்டங்கள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119 அல்லது 118 ஆகிய அவசர அழைப்பு இலக்கங்களுக்கோ அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.

இஸ்லாமியப் மக்கள் எவ்வித அச்சமும் தடையுமின்றி அமைதியான முறையில் தமது மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கும், மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும் இலங்கை பொலிஸார் எடுக்கும் இந்த முயற்சிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
சுற்றுலாப் பயணிகளிடம் ஏடிஎம் கார்டு மூலம் 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா மோசடி; கொழும்பில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் அதிரடிக் கைது!

சுற்றுலாப் பயணிகளிடம் ஏடிஎம் கார்டு மூலம் 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா மோசடி; கொழும்பில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் அதிரடிக் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு