Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு குடும்பிமலைப் பகுதியில் இரு உள்ளூர் துப்பாக்கிகளுடன் வயல் வட்டானை தலைவர் உட்பட இருவர் CID யினரால் கைது!

மட்டக்களப்பு குடும்பிமலைப் பகுதியில் இரு உள்ளூர் துப்பாக்கிகளுடன் வயல் வட்டானை தலைவர் உட்பட இருவர் CID யினரால் கைது!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கிகளுடன் இரு விவசாயிகள் நேற்று திங்கட்கிழமை (25) குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகத் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பிமலைப் பகுதியில் சட்டவிரோத ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினையடுத்தே இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டது. சம்பவ தினமான நேற்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில், குடும்பிமலை வயல் பகுதியைச் சிஐடி (CID) அதிகாரிகள் திடீரெனச் சுற்றிவளைத்துத் தீவிர சோதனை நடவடிக்கையை நடத்தினர்.

இதன்போது, அந்த வயல் பகுதியில் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமான இரண்டு உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கிகள் அதிகாரிகளால் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன.

துப்பாக்கிகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே குடும்பிமலை வயல் வட்டானைத் தலைவரான 45 வயதுடைய நபர் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு விவசாயி உட்பட இருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் சிஐடி அதிகாரிகள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு