Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரில்வின் சில்வா மற்றும் பிரபு தெரிவித்த கருத்தை நிராகரித்த நலிந்த ஜயதிஸ்ஸ

ரில்வின் சில்வா மற்றும் பிரபு தெரிவித்த கருத்தை நிராகரித்த நலிந்த ஜயதிஸ்ஸ

3 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு தேர்தல்களை நடத்த முடியாது என்ற டில்வினின் கூற்றினையும் அவர் நிராகரித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை குறித்து ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, இன்றைய அமைச்சரவை ஊடக சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

இருப்பினும், தேர்தலை நடத்துவதில் உள்ள முக்கியத் தடை நிதி தொடர்பானது அல்ல, சட்ட விதிகள் தொடர்பானது என்றும் அவர் கூறினார்.

சட்டப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஒரு பாராளுமன்றக் குழு தற்போது செயல்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேவையான சட்டக் கட்டமைப்பு அமைக்கப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

“இந்த அரசாங்கம் ஏற்கனவே எட்டு மாதங்களுக்குள் இரண்டு தேர்தல்களை நடத்தியுள்ளது.
அரசியலமைப்பின்படி மக்களின் இறையாண்மையைப் பாதுகாத்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் எதிர்பார்ப்பு,” என்றும் அவர் கூறினார்.

மேலும், அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்படாவிட்டாலும், தேவைப்பட்டால் ஒரு விசேட நிதிஒதுக்கம் மூலம் கூட தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்றும் அமைச்சர் ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

மாகாணசபை தேர்தலுக்கு நிதியில்லை-ஆனால் நிச்சயம் நடத்துவோம்!; NPP பிரபு

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
தேசிய வெசாக் வாரம்; நாடு முழுவதும் 3 நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்!

தேசிய வெசாக் வாரம்; நாடு முழுவதும் 3 நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு