Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கந்தளாய் வான்எல கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை கொடூரத் தாக்குதல்; வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் விவசாயி படுகாயம்!

கந்தளாய் வான்எல கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை கொடூரத் தாக்குதல்; வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் விவசாயி படுகாயம்!

1 week ago
in செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை ஒன்று இன்று (27) அதிகாலை நடத்திய தாக்குதலில், விவசாயி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலில் குடியிருப்பு ஒன்றின் சுவர்கள் இடிந்துள்ளதோடு, வாழ்வாதாரப் பயிர்களும் முழுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில்,

“இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சமையலறைப் பகுதியில் திடீரென பலத்த சத்தம் கேட்டது. பதற்றமடைந்து வெளியே வந்து பார்த்தபோது, காட்டுயானை ஒன்று வீட்டின் சுவரை உடைத்துக்கொண்டிருந்தது. நாங்கள் கூச்சலிட்டதும், அது வீட்டின் மற்றொரு சுவரையும் இடித்துத் தள்ளியது.

சத்தம் கேட்டு ஓடிவந்த எனது தந்தை, இடிந்து விழுந்த சுவரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு கந்தளாய் ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்,” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. நன்கு காய்த்துக்கொண்டிருந்த சுமார் 12 தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மனித–யானை மோதலால் தொடர்ந்து பாதிக்கப்படும் தங்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்க உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம மக்களின் உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாக்கச் செயற்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
19 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளைச் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில், வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது!

19 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளைச் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில், வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு