Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் கடும் அசௌகரியம்?; மினா கூடாரங்களில் உணவு, குளியலறை வசதிகள் குறைவால் அதிருப்தி

இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் கடும் அசௌகரியம்?; மினா கூடாரங்களில் உணவு, குளியலறை வசதிகள் குறைவால் அதிருப்தி

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இம்முறை இலங்கையிலிருந்து சுமார் 3500 ஹஜ் யாத்திரிகர்கள் மக்கா புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா சென்றுள்ள நிலையில், மினா கூடாரங்களில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

துல்ஹஜ் 8 ஆம் நாள் “யவ்முத் தர்வியஹ்” நிகழ்வை முன்னிட்டு யாத்திரிகர்கள் மக்காவில் இருந்து மினா மைதானத்திற்கு பயணித்தனர். அங்கு இலங்கை ஹஜ் முகவர்கள், சவூதி சேவை வழங்குநரான “அல்-ரிஹ்லாத் முதவ்விஃப்” ஊடாக ஒதுக்கப்பட்ட கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். எனினும் சுமார் 3000 யாத்திரிகர்களுக்கு வெறும் 38 குளியலறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், உணவிற்காக இரண்டு பஃபே நிலையங்கள் மட்டுமே இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உணவு பெறுதல், மலசலகூட பயன்பாடு, குளியல் மற்றும் வுழூ செய்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாத்திரிகர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அமைதியாக வழிபாடுகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் சேவைகளை வழங்கிய “அல்-பயாத்” முதவ்விஃப் நிறுவனத்தின் மூலம் இம்முறை சேவைகளைப் பெற முடியாமல் போனதுடன், இறுதி நேரத்தில் “அல்-ரிஹ்லாத்” நிறுவனத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டதே தற்போதைய நெருக்கடிக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இலங்கை யாத்திரிகர்கள் சார்பில் கட்டணங்கள் முன்கூட்டியே செலுத்தப்பட்டிருந்த போதிலும், சேவை வழங்குநரைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் திட்டமிடல் குறைபாடுகளை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நேற்று யாத்திரிகர்கள் அரஃபா மைதானம் நோக்கி பயணித்தனர். அதன் பின்னர் அவர்கள் முஸ்தலிஃபா பகுதியில் இரவு தங்கி, ஈதுல் அழ்ஹா தினத்தில் மீண்டும் மினா கூடாரங்களுக்கு திரும்பவுள்ளனர். தொடர்ந்து “ஷைத்தானுக்கு கல் எறிதல்”, “ஹத்யு குர்பானி”, “இஹ்ராம் களைதல்”, “தவாபுல் இபாழா” உள்ளிட்ட முக்கிய ஹஜ் கிரியைகள் நடைபெறவுள்ளதால் தற்போதைய வசதி குறைபாடுகள் மேலும் சிரமங்களை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும் யாத்திரிகர்கள் “ஐயாமுத் தஷ்ரீக்” எனப்படும் மூன்று நாட்கள் தொடர்ந்து மினாவில் தங்கியிருக்க வேண்டியிருப்பதும் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு, இலங்கை தூதரகம் – சவூதி அரேபியா மற்றும் ஜித்தா கொன்ஸல் ஜெனரல் அலுவலகம் ஆகியவை உடனடியாக சவூதி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடார வசதிகளை ஏற்பாடு செய்வது ஹஜ் முகவர்களின் பொறுப்பாகவும், பொதுவசதிகள் சவூதி ஹஜ் அமைச்சின் பொறுப்பாகவும் இருந்தாலும், அனைத்து யாத்திரிகர்களும் உரிய கட்டணங்களை செலுத்தியுள்ளதால் அவர்களது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு பொறுப்பான தரப்புகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட யாத்திரிகர்களுக்கு தேவையான நிவாரணம் மற்றும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
Next Post
14 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு 30 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

14 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு 30 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.