முஜிபுர் ரஹ்மானுக்கும், போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர் ஒருவருக்கும் இடையில் 53 தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டதாக இலங்கையின் தொலைக்காட்சி ஊடகம் ஒன்று வெளியிட்டது திரிபுபடுத்தப்பட்ட செய்தி என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான விளக்கத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கியுள்ளதாக கூறிய அவர் தாம் போதை வியாபாரிகளோடு தொடர்பில் இருந்தால் ஏன் என்னை கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.
தேர்தல் காலத்தில் தன்னிடம் தற்காலிகமாக பணியாற்றிய ஒருவர் பாவித்த சிம் அட்டை சிறைச்சாலையில் இருந்த ஒரு சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் தன்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறிய அவர் சிறைச்சாலைக்குள் இருந்து எவரும் தன்னோடு சட்டவிரோதமாக தொலைபேசியில் கதைக்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைகக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.








