Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் ஆட்டோ சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து கொள்ளை!

மட்டக்களப்பில் ஆட்டோ சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து கொள்ளை!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகரில் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்ற நபர்கள், சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து அவரது தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

மயங்கிய நிலையில் காணப்பட்ட 62 வயதுடைய ஆட்டோ சாரதி, ரிதித்தென்னை காட்டு பகுதியில் இன்று (28) வியாழக்கிழமை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூநொச்சிமுனையைச் சேர்ந்த குறித்த சாரதி, நேற்று (27) பிற்பகல் தனது வீட்டிற்கு சென்று உணவருந்திய பின்னர் மீண்டும் ஆட்டோ தரிப்பிடத்திற்குச் சென்றுள்ளார். இரவு உணவிற்காக இடியாப்பம் வாங்கிக் கொண்டு இரவு 7 மணியளவில் வீடு திரும்புவதாக அவர் உறவினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், ஆட்டோ தரிப்பிடத்தில் இருந்து ஒருவர் வாழைச்சேனைக்கு செல்ல வேண்டுமெனக் கூறி ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்றுள்ளார். ஆனால் இரவு 11 மணி ஆகியும் சாரதி வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

இதையடுத்து இன்று காலை, ரிதித்தென்னை காட்டு பகுதியை அண்மித்த இடத்தில் ஆட்டோ ஒன்றினுள் மயங்கிய நிலையில் ஒருவர் கிடப்பதை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், சாரதியை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யில் அனுமதித்தனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், சாரதிக்கு மயக்க மருந்து தெளித்த பின்னர் அவரது ஒரு பவுன் தங்க மோதிரம், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
Next Post
மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம்!

மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.