Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருள் விலை அதிகரிப்பால் அதிகரிக்கப்படப்போகும் முச்சக்கர வண்டி கட்டணங்கள்

எரிபொருள் விலை அதிகரிப்பால் அதிகரிக்கப்படப்போகும் முச்சக்கர வண்டி கட்டணங்கள்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளின் முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 130 ரூபாயாக உயர்த்தும் முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையை மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் விலைக்கட்டுப்பாட்டுக் குழுவிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் முதன்மைச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்தார்.

அண்மைய இரண்டு சந்தர்ப்பங்களில் பெட்ரோல் விலை மொத்தமாக 36 ரூபாயால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், கடந்த முறை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டண உயர்வை கோரவில்லை என்றாலும், இம்முறை ஏற்பட்டுள்ள கணிசமான விலை உயர்வால் பழைய கட்டண முறையில் சேவையை தொடர்வது சிரமமாக இருப்பதாக கூறினார்.

மேலும், எரிபொருளுக்கு அப்பால் கிரீஸ், இன்ஜின் ஆயில் உள்ளிட்ட வழுவூட்டிகள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தொழில்ச் செலவுகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், முச்சக்கர வண்டித் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
மட்டு கல்குடாவில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

மட்டு கல்குடாவில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு