Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லெபனானை கைப்பற்ற இஸ்ரேல் பிரதமர் பிறப்பித்த உத்தரவு; முன்னேறும் படைகள்

லெபனானை கைப்பற்ற இஸ்ரேல் பிரதமர் பிறப்பித்த உத்தரவு; முன்னேறும் படைகள்

3 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தரைவழி இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துமாறும், அந்நாட்டின் உள்பகுதிகளை நோக்கி முன்னேறுமாறும் இஸ்ரேலியப் படைகளுக்குப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆறு வாரங்களுக்கு முன்னர் இருதரப்பிற்கும் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் இந்த அதிரடித் தாக்குதல் உத்தரவு ஞாயிற்றுக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தப் போர் தீவிரமடைந்தது.

இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி ஊடுருவல்களால் லெபனானில் இதுவரை 3,370 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 24 படையினரும் 4 பிரதானிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனானில் சுமார் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அதேபோல், இஸ்ரேலின் வடக்குப் பகுதியிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

லெபனானில் அதிகரித்து வரும் இந்த மிக மோசமான வன்முறைச் சூழல் குறித்து விவாதிப்பதற்காக, இன்று திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரான்ஸ் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை முழுமையாகக் கைப்பற்றுவதே தங்களது நோக்கம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.தெற்கு லெபனானில் உள்ள மிக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த, 900 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க போஃபோர்ட் கோட்டையையும் அதன் மலைத்தொடரையும் இஸ்ரேலியப் படைகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
புகைத்தலே தொற்றாநோய்கள் அதிகரிப்பதற்கான பிரதான காரணம்; வைத்திய அதிகாரி ருதேசன்!

புகைத்தலே தொற்றாநோய்கள் அதிகரிப்பதற்கான பிரதான காரணம்; வைத்திய அதிகாரி ருதேசன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு