Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருள் நுகர்வு குறைந்தாலும், இறக்குமதிச் செலவு உயர்வு; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

எரிபொருள் நுகர்வு குறைந்தாலும், இறக்குமதிச் செலவு உயர்வு; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் எரிபொருள் நுகர்வு குறைவடைந்துள்ள போதிலும், உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (02) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், உலக சந்தை விலை மாற்றங்களின் தாக்கத்தால் எரிபொருள் இறக்குமதிக்கான அரச செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் கூறினார்.

அவரின் விளக்கத்தின்படி, ஜனவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக 186 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்ட நிலையில், மே மாதத்தில் அந்தச் செலவு 521 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

எரிபொருள் நுகர்வு தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஓட்டோ டீசல் பயன்பாடு ஜனவரியில் 4,538 கிலோ லீற்றராக இருந்த நிலையில், மே மாதத்தில் 3,701 கிலோ லீற்றராக குறைந்துள்ளதாக குறிப்பிட்டார். அதேவேளை, மொத்த டீசல் பயன்பாடு ஜனவரியில் 5,944 கிலோ லீற்றராகவும், மே மாதத்தில் 5,394 கிலோ லீற்றராகவும் பதிவாகியுள்ளது.

மேலும், 92 ஒக்டேன் பெற்றோல் பயன்பாடு ஜனவரியில் 5,565 கிலோ லீற்றராக இருந்த நிலையில், மே மாதத்தில் 4,849 கிலோ லீற்றராகக் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நுகர்வு அளவுகள் 80 முதல் 90 சதவீத வரையிலான மட்டத்தில் காணப்பட்ட போதிலும், உலக சந்தை விலை உயர்வின் காரணமாக இறக்குமதிச் செலவு 186 மில்லியன் டொலரிலிருந்து 521 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உலக சந்தையின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப உள்நாட்டு எரிபொருள் விலைகளை சமநிலைப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி 14ஆவது நாளை எட்டியது; 270 எலும்புக் கூடுகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி 14ஆவது நாளை எட்டியது; 270 எலும்புக் கூடுகள் அடையாளம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு