Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை பட்டதாரிகளுக்கு ஜப்பானின் மீன்பிடித் துறையில் வேலைவாய்ப்பு!

இலங்கை பட்டதாரிகளுக்கு ஜப்பானின் மீன்பிடித் துறையில் வேலைவாய்ப்பு!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் நெமோட்டோ யுகினோரி ஆகியோருக்கிடையிலான விசேட கொள்கை ரீதியிலான கலந்துரையாடல் நேற்று (02) டோக்கியோ நகரில் நடைபெற்றது.

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான கடற்றொழில், நீரியல் வளர்ப்பு மற்றும் கடல்வள முகாமைத்துவத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்தது.

இதன்போது, இலங்கையின் கடல் உணவுப் பெறுமதி சங்கிலியை மேம்படுத்துதல், ஜப்பானிடமிருந்து நவீன தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆதரவுகளைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், ஜப்பானிய சந்தையில் இலங்கை கடல் உணவுப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தச் சந்திப்பின் முக்கிய அம்சமாக, இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மீன்வளம், கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பீடங்களில் பட்டம் பெறும் இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானின் மீன்பிடி தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்க ஜப்பானிய தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைவாய்ப்பு திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை மற்றும் இலங்கைத் தூதரகம் ஊடாக ஒருங்கிணைத்து விரைவாக நடைமுறைப்படுத்த இரு தரப்பினரும் தீர்மானித்துள்ளனர்.

இலங்கையின் கடற்றொழில் துறையை நவீன தொழில்நுட்பங்களுடன் உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கு ஜப்பானிய அரசாங்கம் வழங்கும் ஆதரவு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பிவித்துரு ஜனக குமாரசிங்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் பி. கே. கோலித கமல் ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
சம்மாந்துறையில் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்கள் கைது

சம்மாந்துறையில் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.