Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அங்குருவாதொட முதியோர் இல்ல தீ விபத்து; உயிரிழப்பு 12 ஆக உயர்வு!

அங்குருவாதொட முதியோர் இல்ல தீ விபத்து; உயிரிழப்பு 12 ஆக உயர்வு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அங்குருவாதொட – பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முன்னதாக மூவர் காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த 7 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் மையத்தில் இருந்த சுமார் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

‘மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல’ எனப்படும் இந்த முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நேற்று (03) பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அந்த கட்டிடம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

விபத்து நேரத்தில் அந்த இல்லத்தில் சுமார் 72 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் சிலர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று (04) காலை இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்னர் சடலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விசாரணைகளை முன்னெடுக்க மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்
அரசியல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்

July 22, 2026
Next Post
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு; அநுராதபுர நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு; அநுராதபுர நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு