Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியா ‘சிறுவர் பாதாளக் குழு’ சிக்கியது; 7 பேர் சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டனர்

வவுனியா ‘சிறுவர் பாதாளக் குழு’ சிக்கியது; 7 பேர் சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டனர்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘வவுனியா சிறுவர் பாதாளக் குழு’ தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 மாணவர்களை ஈரட்டைப்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான இரு மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் அண்மையில் ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளி பரவலாகப் பகிரப்பட்டது. அதில், வவுனியா பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், மற்றுமொரு தரப்பைச் சேர்ந்த இரு மாணவர்களை மனிதாபிமானமற்ற முறையில் மிகக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இக்காணொளி தொடர்பாக தீவிர விசாரணைகளில் இறங்கிய ஈரட்டைப்பெரியகுளம் பொலிஸார், தாக்குதலில் ஈடுபட்ட வவுனியா, ஈரட்டைப்பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 7 மாணவர்களை அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொ0டூரத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த 15 வயதுடைய இரு மாணவர்கள், தற்போது வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் நேற்று (03.06.2026) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான், சந்தேக நபர்களான 7 மாணவர்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை கெபித்திகொல்லாவ சிறுவர் பராமரிப்பு (பரோல்) இல்லத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஈரட்டைப்பெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சிறுவர்கள் மத்தியில் இத்தகைய வன்முறைப் போக்கு அதிகரித்திருப்பது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
செம்மணியில் இன்றும் 08 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு