Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்

அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பல முக்கிய விபரங்களை பொலிஸார் வெளிக்கொணர்ந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அந்த வங்கியின் உதவி முகாமையாளர் நேற்று (7) குறித்த வங்கி வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

சந்தேகநபான உதவி வங்கி முகாமையாளர் பல்வேறு பெண்களிடம் இருந்து வட்டிக்கு கடன் பெற்றுள்ள நிலையில், அதற்கான வட்டி தொகையினை செலுத்துவதற்காகவே வங்கியிலிருந்து இப்பண மோசடியைச் செய்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் அவ்வாறு பெற்ற பணத்தைச் இரத்தினக்கல் போன்ற பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளமையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், குறித்த அரச வங்கியின் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணத்தை வைப்புச் செய்யும் பணியை இந்த சந்தேகநபரே மேற்கொண்டு வந்துள்ளார்.

வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விடக் குறைவான பணத்தையே அவர் ஏ.டி.எம் இயந்திரங்களில் வைப்புச் செய்துவிட்டு, மீதிப் பணத்தை நீண்ட காலமாகத் தம்வசம் இரகசியமாக வைத்திருந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த வங்கியில் நீண்ட காலமாக நேரடி நிதி கணக்காய்வு எதுவும் நடத்தப்படாத காரணத்தினாலேயே, இந்த மோசடி வெளியில் தெரியாமல் இருந்துள்ளது.

இதேவேளை, இந்த உதவி முகாமையாளர் பல்வேறு நபர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து வந்துள்ளதுடன், தமக்கு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்த மொடலிங் துறையைச் சேர்ந்த இளம் பெண்கள் பலருக்கு பெருமளவில் பணத்தைச் செலவிட்டுள்ளார் என்பதும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, இந்த அரச வங்கியில் வெளிநபர் எவராலும் பணக் கொள்ளையிடப்பட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை.

இது, சந்தேகநபரான உதவி முகாமையாளர், பாதுகாப்பு உத்தியோகத்தரை இணைத்துக்கொண்டு மிகவும் திட்டமிட்ட முறையில் ஜோடித்த ஒரு போலியான குற்றச்சாட்டாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டி.டபிள்யூ.சி.தர்மரத்னவின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
6,00,000 போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் உட்பட நால்வர் கைது

6,00,000 போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் உட்பட நால்வர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.