ஈரானின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள அரசுக்குச் சொந்தமான இராணுவ இலக்குகள் மீது தமது வான்படை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேவேளை, தலைநகர் தெஹ்ரானின் நகர்ப்புற பகுதிகள் இலக்காகக் கொள்ளப்படவில்லை என ஈரானிய உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தெஹ்ரான் தீயணைப்புத் துறையை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட தகவலின்படி, திங்கட்கிழமை அதிகாலை தெஹ்ரானின் மேற்குப் பகுதிகளில் குறைந்தது இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், தப்ரிஸ், இஸ்பஹான் நகரங்கள் மற்றும் கராஜ் நகருக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் பல வெடிச்சத்தங்கள் பதிவாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களின் அளவு அல்லது உயிரிழப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.








