Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் பாடசாலை ஒன்றின் அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக போராட்டம்

ஏறாவூர் பாடசாலை ஒன்றின் அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக போராட்டம்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் அல் அஷ்ரப் வித்தியாலயத்தின் அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரியும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யக்கோரியும் பாடசாலை மாணவர்களாலும் பெற்றோர்களாலும் பாடசாலை மூடப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஏறாவூர் அல் அஷ்ரப் வித்தியாலயத்தின் அதிபரின் இடமாற்றத்தை நிறுத்தற் கூறி பாடசாலை கதவினை மூடி பெற்றோர் மற்றும் மாணவர்களும் சேர்ந்து பாடசாலை முன்பாகவே ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று காலை (12) பாடசாலையின் முன் வாயிலை மூடி மாணவர்கள் பாடசாலைக்குள் செல்லாமல் அதிபரின் இடமாற்றத்தை இரத்தது செய்ய கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகம் கலந்து கொண்டதில் குறித்த அதிபர் சிறந்த முறையில் செயற்பட்டு வரும் போது அதிபர் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் பல்வேறு கோஷங்களை இட்டனர்.

ஆசிரியர்களை பாடசாலைக்கு பெற்றுத்தருமாறு பெற்றோர்கள் கல்வி திணைக்களத்திற்கு தெரிவித்த போது எந்தவித நடவடிக்கைளும் எடுக்க வில்லை ஆனால் அதிபர் மீது குற்றச்சாட்டு வந்தபோது விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளிர்கள். பாடசாலை நல்ல நிலைமைக்கு திரும்பியுள்ளதே இந்த அதிபரினாலேதான் ஆகவே அதிபரின் இடமாற்றத்தை இரத்தது செய்யும் வரை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையின் நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டம் செய்ததனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளே செல்லவில்லை. இதனால் பாடசாலை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது.

ஆர்பாட்ட இடத்திற்கு ஏறாவூர் பொலிசார் வருகை நந்திருந்ததுடன், வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் ,பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி ஏஎல் .அபுள்ஹஸன் ஆகியோரும் வருகை தந்து ஆர்ப்பாட்டக்கார்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இப்பாடசாலை மிகநீண்டகாலமாக தகுதியான அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இன்றி புறக்கணிக்கப்படுவதனால் கல்வித்தரத்தில் பின்தங்கிக் காணப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் முறையிட்டனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடகாலமாக அதிபராகக்கடமையாற்றி வருபவர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக மக்களால் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த இடமாற்றம் இரத்துச் செய்யப்படும்வரை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறி பெற்றார்கள் வீதியில் நின்ற பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

அப்பாடசாலையில் தற்போது பதில் அதிபர் பொறுப்பிலுள்ளவருக்கெதிராக அலுவலகமட்ட விசாரணை நடைபெற்றுவருவதனால் விசாரணை முடியும்வரை அவர் தற்காலிகமாக வேறுபாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவாக சுமுகமான தீர்வு காணப்படுமென்றும் வலயக்கல்விப்பணிப்பாளர் உறுதியளித்தார்.

இதையடுத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பாடசாலை வாயில் திறக்கப்பட்டடு ஆசிரியர் ஒப்பமிட்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வானிலை எச்சரிக்கை; பலத்த காற்று, இடியுடன் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வானிலை எச்சரிக்கை; பலத்த காற்று, இடியுடன் மழைக்கு வாய்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.